Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மூடுவிழாவை நோக்கி "ஜாபர்சேட்' உருவாக்கிய நுண்ணறிவு பிரிவு

மூடுவிழாவை நோக்கி "ஜாபர்சேட்' உருவாக்கிய நுண்ணறிவு பிரிவு

மூடுவிழாவை நோக்கி "ஜாபர்சேட்' உருவாக்கிய நுண்ணறிவு பிரிவு

மூடுவிழாவை நோக்கி "ஜாபர்சேட்' உருவாக்கிய நுண்ணறிவு பிரிவு

ADDED : ஆக 30, 2011 12:31 AM


Google News

ராமநாதபுரம்:தி.மு.க., ஆட்சியில் உளவு பிரிவு ஏ.டி.ஜி.பி., ஜாபர்சேட் உருவாக்கிய ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு செயல்பாடின்றி, பெயரளவில் இருப்பதால், மூடுவிழா காணும் நிலை ஏற்பட்டுள்ளது.கள்ளநோட்டு, ஆள் கடத்தல், ரவுடிகளை வைத்து கட்ட பஞ்சாயத்து செய்யும் கும்பல்களை கண்காணித்து, தகவல் தெரிவிக்க முந்தைய தி.மு.க., ஆட்சியில் உளவு பிரிவு ஏ.டி.ஜி.பி., ஜாபர்சேட், ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவை துவக்கினார்.

இரண்டு மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரு பிரிவு செயல்பட்டது. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், மாவட்டத்திற்கு ஒரு எஸ்.ஐ., டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு ஒரு போலீசார் வீதம் பணியில் உள்ளனர். தற்போது இப்பிரிவு போலீசார் எவ்வித பணியும் இன்றி உள்ளனர். இதனால், இப்பிரிவை மூடுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us