ADDED : அக் 11, 2011 02:17 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தாலுகா தில்லைவிளாகத்தை சேர்ந்தவர் யோகநாதன்.
இ.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் 2001ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.கடந்த 2006ல் நடந்த தேர்தலில் யோகநாதனின் மனைவி மாலதி போட்டியிட்டு வெற்றி பெற்று பஞ்., தலைவரானார். தற்போதைய தேர்தலிலும் மாலதி போட்டியிடுகிறார். மருமகள் மாலதியை எதிர்த்து மாமியார் சகுந்தலா சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்.இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


