ADDED : அக் 07, 2011 10:52 PM
சிவகங்கை : ம.தி.மு.க.,நகராட்சி வேட்பாளர் கார்கண்ணனை ஆதரித்து இன்று மாலை சிவகங்கையில் வைகோ பிரச்சாரம் செய்கிறார்.
மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கையில் இன்று நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் கார்கண்ணனை ஆதரித்து மாலை 5 மணிக்கு வைகோ பிரச்சாரம் செய்கிறார். கட்சியினர் தவறாது கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


