மீண்டும் இந்தி சினிமாவில் நடிகை பூஜா பத்ரா
மீண்டும் இந்தி சினிமாவில் நடிகை பூஜா பத்ரா
மீண்டும் இந்தி சினிமாவில் நடிகை பூஜா பத்ரா
ADDED : அக் 03, 2011 07:29 PM

பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த மாடல் அழகியும், நடிகையுமான பூஜா பத்ரா
பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
இது
குறித்து கூறிய நடிகை பூஜா பத்ரா : ஆமாம் நான் இயக்குநர் சாகர்
பெல்லேரியின் ஹம் தும் சபானா படத்தில் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப்
பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இப்படத்தில் மிஸ் இந்தியா போட்டியின் நடுவராக நடிக்கிறேன். நானே ஒரு மிஸ்
இந்தியாவாக இருந்ததாலும், மிஸ் இந்தியா போட்டியின் நடுவராக பலமுறை
இருந்துள்ளதாலும் இந்த வேடத்தில் நடிப்பது மிகவும் சுலபமாக இருக்கும் என
கூறியிருக்கிறார்.


