/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இரவு காவலர் ரோந்து வசதி வார்டு காங்., வேட்பாளர் உறுதிஇரவு காவலர் ரோந்து வசதி வார்டு காங்., வேட்பாளர் உறுதி
இரவு காவலர் ரோந்து வசதி வார்டு காங்., வேட்பாளர் உறுதி
இரவு காவலர் ரோந்து வசதி வார்டு காங்., வேட்பாளர் உறுதி
இரவு காவலர் ரோந்து வசதி வார்டு காங்., வேட்பாளர் உறுதி
ADDED : அக் 06, 2011 11:54 PM
விருதுநகர் : '' தெருக்களில் தினமும் இரவு காவலர் ரோந்து பணிக்கு ஏற்பாடு
செய்வதாக ,'' விருதுநகர் 6 வது வார்டு காங்., வேட்பாளர் எல். செய்யது
இப்ராஹிம் தெரிவித்தார். விருதுநகர் நகராட்சி 6 வது வார்டில் காங்.,
சார்பில் போட்டியிடும் அவர், எல்.பி.எஸ். நகர் பகுதியில் ஓட்டுகள்
சேகரித்தபோது கூறியதாவது: படேல் ரோடு, எல்.பி.எஸ். நகர், இளங்கோவன் தெரு,
ஹெச்ஹெச் ரோடு பகுதிகளில் உள்ள ரோடுகள் புனரமைக்கப்படும். தெருவிளக்கு
இல்லாத இடத்தில் சோடியம் விளக்கு அமைக்கப்படும். இப்பகுதிக்கு தினமும் குடி
தண்ணீர் கிடைக்க நகராட்சி மூலம் நடவடிக்கை எடுப்பேன். மக்களின்
பாதுகாப்பு நலன் கருதி ' இரவு நேரங்களில் காவலர் ரோந்து பணியை
ஏற்படுத்துவேன். ரேஷன் பொருட்கள் தரமானதாகவும், குறிப்பிட்ட நேரத்தில்
கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். அனைத்து தெருக்களிலும் 'சின்டெக்ஸ் தொட்டி'
அமைப்பேன். கல்லூரி மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற வங்கி கடன் பெற்று
தருவேன்.
தெருக்களில் மழைநீர் தேங்காமல் வாறுகால் , பெண்களுக்கு இலவச கழிப்பறை கட்டி
கொடுக்கப்படும். வாய்ப்பளித்தால் நகரிலே சிறந்த வார்டாக மாற்றி
காட்டுவேன், என்றார்.


