Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வார்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன்

வார்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன்

வார்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன்

வார்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன்

ADDED : அக் 07, 2011 10:52 PM


Google News

காரைக்குடி : ' வெற்றி பெற்றால், வார்டின் முன்னேற்றத்திற்கு உறுதுனையாக இருப்பேன்' என, காரைக்குடி நகராட்சி 34 வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர் ச.ருக்மணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வார்டு மக்களுக்கு என்னை நன்றாக தெரியும்.

அவர்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்த பாடுபடுவேன்.

மக்களின் நலனுக்காக இப்பகுதியில் 'பொது சேவை மையம்' அமைத்து கரன்ட் பில், குடிநீர் கட்டணம், வீட்டு வரி போன்றவைகளை செலுத்த உரிய நடவடிக்கை எடுப்பேன். இலவச திருமண மண்டபம், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா அமைக்க பாடுபடுவேன். திட்ட பணிகளில் கவனம் செலுத்தி, காரைக்குடி நகராட்சியில் எனது வார்டை முதன்மை வார்டாகவும், முன்மாதிரியான வார்டாகவும் மாற்ற பாடுபடுவேன். வார்டு பிரச்னை எதுவாக இருந்தாலும், முன்னின்று அவற்றிற்கு தீர்வு காண பாடுபடுவேன்.'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us