ADDED : செப் 30, 2011 12:24 AM
கிருஷ்ணகிரி: காந்திஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ம் தேதி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்று கலெக்டர்
மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மதுபான விதிகள் 1989, 23-வது விதியின்படி காந்திஜெயந்தியன்று
மதுபான விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி,
அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்தநாள் அன்று மதுபான விற்பனை இல்லா
தினமாக கடைப்பிடிக்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு
மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுக்கூடங்கள், மற்றும் மதுக்கூடங்களுக்கான
உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் வரும் 2ம் தேதி
மூடப்படும். இந்த உத்தரவைமீறி விற்பனையாளர்கள் மதுக்கூடங்களை திறந்தாலும்,
விற்பனை செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.