/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொடைக்கானல் ஏரியில் தொடரும் தண்ணீர் திருட்டுகொடைக்கானல் ஏரியில் தொடரும் தண்ணீர் திருட்டு
கொடைக்கானல் ஏரியில் தொடரும் தண்ணீர் திருட்டு
கொடைக்கானல் ஏரியில் தொடரும் தண்ணீர் திருட்டு
கொடைக்கானல் ஏரியில் தொடரும் தண்ணீர் திருட்டு
ADDED : செப் 02, 2011 11:58 PM
கொடைக்கானல் : கொடைக்கானலில் குடிநீர் பற்றாக்குறையால், நகராட்சி சொந்தமான கிணற்றில் தண்ணீர் திருடப்படுகிறது.நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கும் அப்சர்வேட்டரியிலுள்ள நீர்த்தேக்கம் (மொத்தம் 30 அடி) மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்தாண்டு எதிர்பார்த்த மழை இல்லாததால் நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுகிறது. நகர்பகுதியிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. நகராட்சி சார்பில் நான்கு லாரிகள் மூலம் ஏரியருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கின்றனர். அந்தந்த தெருவிலுள்ள குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. காட்டேஜ்கள், பிளாட்பார ஓட்டல்கள் தனியாரிடம் ஒரு லோடுக்கு ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி தண்ணீரை விலைக்கு வாங்குகின்றனர். ஆனால் சிலரோ அனுமதியின்றி ஏரியில் தண்ணீர் திருடுவது, நகராட்சி சொந்தமான கிணற்றில் பணியாளர்களை 'கவனித்து' விட்டு தண்ணீர் எடுத்துச்செல்கின்றனர். இந்த திருட்டு இரவில் நடக்கிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல் லை.


