/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் : கலெக்டர் உத்தரவு சாத்தியமா?3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் : கலெக்டர் உத்தரவு சாத்தியமா?
3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் : கலெக்டர் உத்தரவு சாத்தியமா?
3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் : கலெக்டர் உத்தரவு சாத்தியமா?
3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் : கலெக்டர் உத்தரவு சாத்தியமா?
ADDED : ஆக 11, 2011 10:37 PM
சின்னாளபட்டி : குடிநீர் வினியோகத்தில் கலெக்டர் உத்தரவை அமல்படுத்த இயலாமல், பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
சின்னாளபட்டிக்கு ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கம், பேரணையாற்றில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. நகரில் உள்ள மூன்று மேல்நிலை தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு, சுழற்சி முறையில் வினியோகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு ஒரு முறை வழங்கிய பின் மீண்டும் குடிநீர் வழங்க ஆறு நாட்கள் இடைவெளி ஏற்படுகிறது. குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் 10 நாட்களுக்கு மேலாகிறது. சமீபத்தில் பேரூராட்சியை ஆய்வு செய்த கலெக்டர் நாகராஜன், ''மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். வினியோக முறையை மாற்றி அமைக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார். ஆனால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவது, நடைமுறை சாத்தியமற்றதாக உள்ளது. நிலையான, நீடித்த குடிநீர் ஆதாரம் இல்லாத நிலையில், 36 கி.மீ., கடந்து நீரை கொண்டுவர வேண்டியுள்ளது. இதனால் கலெக்டர் உத்தரவை அமல்படுத்த முடியாமல், பேரூராட்சியினர் திணறி வருகின்றனர்.


