/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/80 விநாயகர் சிலைகள் நெல்லையில் விசர்ஜனம்80 விநாயகர் சிலைகள் நெல்லையில் விசர்ஜனம்
80 விநாயகர் சிலைகள் நெல்லையில் விசர்ஜனம்
80 விநாயகர் சிலைகள் நெல்லையில் விசர்ஜனம்
80 விநாயகர் சிலைகள் நெல்லையில் விசர்ஜனம்
ADDED : செப் 03, 2011 02:44 AM
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 80 விநாயகர் சிலைகள்
விசர்ஜனம் செய்யப்பட்டன.நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி
இந்து முன்னணி, இளைஞர் அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் சார்பில் இந்த ஆண்டு
387 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி நாளான
நேற்றுமுன்தினம் சில இடங்களில் சிலைகள் நீர்நிலைகளில் விசர்ஜனம்
செய்யப்பட்டன.இரண்டாம் நாளான நேற்று தென்காசி, வள்ளியூர், புளியங்குடி
உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 80 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக
எடுத்துச்செல்லப்பட்டு ஆறுகள், நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு
தீவிரப்படுத்தப்பட்டது.இன்றும், நாளையும் தொடர்ந்து பல்வேறு இடங்களில்
விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.


