/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நலிவடையும் மெடிக்கல் தொழில் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்புநலிவடையும் மெடிக்கல் தொழில் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு
நலிவடையும் மெடிக்கல் தொழில் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு
நலிவடையும் மெடிக்கல் தொழில் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு
நலிவடையும் மெடிக்கல் தொழில் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு
ADDED : செப் 10, 2011 04:14 AM
குற்றாலம் : 'நலிவடைந்து வரும் மெடிக்கல் தொழிலால் அரசுக்கு பல கோடி ரூபாய்
இழப்பு ஏற்பட்டு வருவதை தடுக்க அரசு முன்வர வேண்டும்' என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மருந்து,
மாத்திரைகள் ஸ்டாக் வைத்து கொள்வதால் மெடிக்கல் ஸ்டோர் வியாபாரம்
நலிவடைந்து தொழிலுக்கு முழுக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்
சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மெடிக்கல் பார்மசிஸ்ட்
கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரிகளிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான
மாணவ, மாணவிகள் படித்து வெளிவருகின்றனர். இவர்கள் உள்ளூர்களிலும்,
வெளிநாடுகளிலும் வேலைக்கு செல்வது மட்டுமல்லாமல் சுயமாக மெடிக்கல் ஸ்டோர்
வைத்தும் தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் ஆஸ்பத்திரி
துவங்கும் டாக்டர்களை நம்பி ஏராளமான மெடிக்கல் ஸ்டோர் உருவாகி வருகிறது.
கடந்த 30 ஆண்டுகாலமாக தமிழகத்தில் மெடிக்கல் தொழில் சிறப்பாக செயல்பட்டு
வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மெடிக்கல் தொழில் தொடர்ந்து நலிவடைந்து
வருகிறது. ஆஸ்பத்திரி நடத்தும் டாக்டர்கள் நோயாளிகளுக்கு தாங்களே மருந்து,
மாத்திரைகளை கம்பெனிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதால்
மெடிக்கல் ஸ்டோர்களுக்கு எந்த ஒரு நோயாளியும் டாக்டர் எழுதி கொடுக்கும்
மருந்து சீட்டுக்களை கொண்டு சென்று மருந்து, மாத்திரை, டானிக் வாங்க
வேண்டிய சூழ்நிலை இல்லை. இதனால் கடந்த 30 ஆண்டுகளாக லாபகரமாக இயங்கி வந்த
மெடிக்கல் தொழில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நலிவடைந்து வருகிறது.
ஏராளமான ஊர்களில் உள்ள மெடிக்கல் ஸ்டோர் மூடப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நலிவடைந்து வரும் மெடிக்கல் தொழிலால் அரசுக்கு பலகோடி ரூபாய் வரை இழப்பும்
ஏற்பட்டுள்ளது. மெடிக்கல் ஸ்டோர் உட்பட பல்வேறு சால்வன்சி பெற சுமார் 7
ஆயிரம் ரூபாய் வரை அரசுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் ஆஸ்பத்திரியிலேயே
மருந்து, மாத்திரை விற்பனை செய்யும் டாக்டர்கள் அரசுக்கு உரிய பணம்
செலுத்தாமல் தாங்களாகவே விற்பனை செய்து அரசுக்கு வரி கட்டுவதில்லை. இதனால்
அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பார்மஸி படித்து
முடித்தவர்கள் பலர் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மெடிக்கல் ஸ்டோர்களில் கண்டிப்பாக பார்மசிஸ்ட் நியமிக்கப்பட வேண்டும் என
அரசு விதி உள்ளது. ஆனால் டாக்டர்கள் தாங்களாகவே மருந்து, மாத்திரை வைத்து
வியாபாரம் செய்வதால் ஆஸ்பத்திரிகளில் பார்மசிஸ்ட் நியமிக்கப்பட வேண்டிய
அவசியமில்லாமல் போகிறது. மேலும் மருந்து கம்பெனிகள் தனியார்
ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு
பொருட்களை வழங்கி வருவதாகவும், பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு தரமற்ற
மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாகவும் நோயாளிகள் தரப்பில்
கூறப்படுகிறது. ஆஸ்பத்திரி வளாகத்தில் மெடிக்கல் ஸ்டோர் வைக்க கூடாது என்று
விதி உள்ளதாகவும், விதியை மீறி அரசுக்கு இழப்பீடு ஏற்படும் வகையில்
செயல்படும் ஆஸ்பத்திரிகள் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கவும், அனைத்து
மெடிக்கல் ஸ்டோர்களிலும் பார்மசிஸ்ட்கள் கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும்
எனவும் பார்மசி படித்து முடித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


