/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நள்ளிரவில் திடீர் சோதனை 847 வழக்குகள்: 53 பேர் கைதுநள்ளிரவில் திடீர் சோதனை 847 வழக்குகள்: 53 பேர் கைது
நள்ளிரவில் திடீர் சோதனை 847 வழக்குகள்: 53 பேர் கைது
நள்ளிரவில் திடீர் சோதனை 847 வழக்குகள்: 53 பேர் கைது
நள்ளிரவில் திடீர் சோதனை 847 வழக்குகள்: 53 பேர் கைது
ADDED : ஆக 22, 2011 12:50 AM
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த அதிரடி சோதனையில் வழக்குகளில் ஆஜராகாத 53 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 847 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எஸ்.பி., பகலவன் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை மற்றும் ஓட்டல்கள், லாட்ஜ்களிலும் திடீர் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் கோர்ட்டுகள் மூலம் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என 53 பேர் வாகன சோதனையில் சிக்கினர்.
மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 35, தாறுமாறாக ஓட்டியதாக 21, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியதாக 170, கண்களை கூசச் செய்யும் வகையில் முகப்பு விளக்கு களை பயன்படுத்தியதாக 89, குடிபோதையில் ஓட்டியதாக 100, சந்தேக வழக்குகள் 106 உட்பட ஒரே நாளில் 847 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


