மெட்ரிக் பள்ளியில் தெரசா பிறந்தநாள்
மெட்ரிக் பள்ளியில் தெரசா பிறந்தநாள்
மெட்ரிக் பள்ளியில் தெரசா பிறந்தநாள்
ADDED : ஆக 27, 2011 11:54 PM
திருச்சி: திருச்சி சுப்ரமணியபுரம் பள்ளியில் அன்னை தெரசாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருச்சி சுப்ரமணியபுரம் செயின்ட் ஜான் பிரிட்டோ மெட்ரிக் பள்ளியில், அன்னை தெரசாவின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, தாளாளர் ஆரோக்கியராஜ் அடிகளார், தெரசாவின் பிறப்பு, சிறப்பு மற்றும் அவரிடம் இருந்த மனிதநேய பண்புகளை விளக்கமாக எடுத்துரைத்தார். பள்ளியின் முதல்வர் பிரிட்டோ மற்றும் மாணவ, மாணவிகள், தெரசாவின் அலங்கரிகப்பட்ட படத்துக்கு மலர்தூவி ஆராதனை செய்தனர்.


