Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாலியஸ்டர் புடவைகள்: முதல்வர் பார்வையிட்டார்

பாலியஸ்டர் புடவைகள்: முதல்வர் பார்வையிட்டார்

பாலியஸ்டர் புடவைகள்: முதல்வர் பார்வையிட்டார்

பாலியஸ்டர் புடவைகள்: முதல்வர் பார்வையிட்டார்

ADDED : செப் 07, 2011 12:23 AM


Google News

புதுச்சேரி : ஏ.எப்.டி., மில்லில் நெய்யப்பட்ட பாலியஸ்டர் புடவைகளை முதல்வர் பார்வையிட்டார்.

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக புடவைகள் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் இந்தப் புடவைகள் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது. தற்போது, ஏ.எப்.டி., மூலம் தயாரிக்கப்படும் புடவைகள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். ஏ.எப்.டி., மில்லில் நெய்யப்பட்ட பாலியஸ்டர் மாதிரி புடவைகளை முதல்வர் ரங்கசாமி நேற்று பார்வையிட்டார். ஏ.எப்.டி., இணை மேலாண் இயக்குனர் சுந்தரேசன், பொதுமேலாளர் பாலச்சந்திரன், இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சாலை மேலா ளர் சுந்தரம் உடனிருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us