/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தேர்தல் பணி பாதுகாப்புக்கென கூடுதலாக 600 போலீசார் வருகைதேர்தல் பணி பாதுகாப்புக்கென கூடுதலாக 600 போலீசார் வருகை
தேர்தல் பணி பாதுகாப்புக்கென கூடுதலாக 600 போலீசார் வருகை
தேர்தல் பணி பாதுகாப்புக்கென கூடுதலாக 600 போலீசார் வருகை
தேர்தல் பணி பாதுகாப்புக்கென கூடுதலாக 600 போலீசார் வருகை
ADDED : அக் 12, 2011 09:01 PM
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்கென, கூடுதலாக 600 போலீசார் வந்துள்ளனர்.
இவர்கள் மாவட்டம் முழுவதும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை என, ஐந்து போலீஸ் சப்-டிவிஷன்கள் உள்ளன. மொத்தம், 2,661 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்நிலையில் மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, பயிற்சி எஸ்.ஐ.,க்கள், 150 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீசார், 150 பேர், பயிற்சிப் பள்ளி போலீசார், 300 பேர் என, 600 போலீசார் திருவள்ளூருக்கு வந்துள்ளனர்.இவர்கள் மாவட்ட எல்லையான பொன்பாடி, ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, வேப்பம்பட்டு, திருமழிசை ஆகிய பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாக, மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.


