/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம்சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம்
சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம்
சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம்
சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 26, 2011 12:10 AM
திட்டக்குடி : தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மங்களூர் ஒன்றிய செயற்குழு கூட்டம் திட்டக்குடியில் நடந்தது.
சங்கத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சற்குரு, கவுரவத் தலைவர் ஜெயராஜ், விஜயபாண்டியன் முன்னிலை வகித்தனர். பிரசார செயலர் கணேசன், ரவிச்சந்திரன், சந்திரா உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் சத்துணவு பணியாளர்களை தமிழக அரசு உடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு தனியாக சங்கம் அமைப்பது. சத்துணவு மையம் தோறும் இலவச எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


