/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி ஏர்போர்ட்டில் ஸ்டாலினுக்கு வரவேற்புதிருச்சி ஏர்போர்ட்டில் ஸ்டாலினுக்கு வரவேற்பு
திருச்சி ஏர்போர்ட்டில் ஸ்டாலினுக்கு வரவேற்பு
திருச்சி ஏர்போர்ட்டில் ஸ்டாலினுக்கு வரவேற்பு
திருச்சி ஏர்போர்ட்டில் ஸ்டாலினுக்கு வரவேற்பு
ADDED : அக் 08, 2011 11:47 PM
திருச்சி: திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் நேருவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் 13ம் நடக்கிறது.
இதில் தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் நேருவும், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதியும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். பரஞ்ஜோதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., சார்பில் 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தவிர எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், திருச்சியைச் சேர்ந்த முக்கிய அ.தி.மு.க.,வினரும் இடைத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று களப்பணி ஆற்றிவருகின்றனர்.தி.மு.க., வேட்பாளர் நேரு நில அபகரிப்பு வழக்கில் சிக்கி சிறையில் இருப்பதால், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முன்னாள் அமைச்சர்கள் வேலு, செல்வராஜ், எம்.பி.,க்கள் செல்வகணபதி, விஜயன், சிவா ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பிரச்சாரம் நடந்து வருகிறது. தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருக்கும் தி.மு.க.,வினர் நேருவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனாலும், வேட்பாளர் நேரு இல்லாததால் தேர்தல் பிரச்சாரம் இன்னும் சூடுபிடிக்காதது போல் காணப்படுகிறது.அதைபோக்கும் வகையில் முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க.,வின் பொருளாளருமான இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று மதியம் இரண்டு மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையில் மாவட்ட தி.மு.க., பொறுப்புக்குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அவருடன் இந்திய தேசிய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி., அப்துல் ரஹீமான் உடன் வந்தார். விமான நிலைய வரவேற்பில் முன்னாள் அமைச்சர்கள் வேலு, பெரியகருப்பன், ராஜா, செல்வராஜ், மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ., சேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.


