/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சுரங்கப்பாதையால் பொதுமக்களுக்கு பாதிப்பாம் ஆலோசனைக்குழுவிற்கு திடீர் "ஞானோதயம்'சுரங்கப்பாதையால் பொதுமக்களுக்கு பாதிப்பாம் ஆலோசனைக்குழுவிற்கு திடீர் "ஞானோதயம்'
சுரங்கப்பாதையால் பொதுமக்களுக்கு பாதிப்பாம் ஆலோசனைக்குழுவிற்கு திடீர் "ஞானோதயம்'
சுரங்கப்பாதையால் பொதுமக்களுக்கு பாதிப்பாம் ஆலோசனைக்குழுவிற்கு திடீர் "ஞானோதயம்'
சுரங்கப்பாதையால் பொதுமக்களுக்கு பாதிப்பாம் ஆலோசனைக்குழுவிற்கு திடீர் "ஞானோதயம்'
கடலூர் : கடலூர் லாரன்ஸ் ரோட்டில் அமைக்கப்படவுள்ள சுரங்கப் பாதைக்கு மாற்று திட்டத்தையும் இணைப்பு சாலைகளையும் ஏற்படுத்த வேண்டும் என திருப்பாதிரிப்புலியூர் கீழ்பாலம் பயனாளிகள் மற்றும் ஆலோசனைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.திருப்பாதிரிப்புலியூர் கீழ்பாலம் பயனாளிகள் மற்றும் ஆலோசனைக்குழுக் கூட்டம் கடலூரில் நடந்தது.சுப வள்ளி விலாஸ் கணேசன், வள்ளி விலாஸ் பாலு, அழகப்பா ஜூவல்லரி ராஜகோபால், பவாணி ஜெயபால் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், லாரன்ஸ் ரோட்டில் அரசால் நிர்ணயிக்கப்பட உள்ள ரயில்வே சுரங்கப்பதை 17 அடி அகலமே கொண்டது.தற்போது 30 அடி அகலம் கொண்ட லாரன்ஸ் ரோட்டில் ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தும் போதே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் பான்பரி மார்கெட், மீன் மார்கெட், பாடலி பஜார், நகராட்சி மருத்துவமனை போன்ற பகுதிகளில் உள்ள 1,500 குடும்பத்தினர் பாதிக்கப்படுவர். சுரங்கப்பாதை அமைப்பதால் மாற்று பாதை திட்டம் ஏதும் இல்லாததால் கட்டுமான பணி காலங்களில் போக்குவரத்துத்திற்கு சிரமம் ஏற்படும்.எனவே இத்திட்டத்திற்கு மாற்றாக பஸ் நிலையம் பின்புறம் வழியாக இணைப்பு சாலை, வண்டிப்பாளையம் - நத்தவெளி இணைப்பு சாலை, ராஜம் நகர் - வண்டிப்பாளையம் இணைப்பு சாலை, லாரன்ஸ் ரோடு - பஸ் ஸ்டாண்ட் இணைப்பு சாலை அமைக்கப்பட்ட பின் தேவைப்பட்டால் சுரங்கப்பாதை திட்டத்தை பரிசீலிக்கலாம் என கூட்டத்தில் தீர்மானித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.