ADDED : ஜூலை 25, 2011 11:25 PM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.விளந்தை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர்.
முன்னதாக பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றில் நீராடி பாவாடைராயனுக்கு தீபாராதனை செய்தபின், பால்குடம் எடுத்து வந்தனர்.பால்குடம் ஊர்வலம் கோவிலை வந்தடைந்தவுடன் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


