/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/டூவீலர்-டிராக்டர் மோதல் 2 பேர் பலி: ஒருவர் கைதுடூவீலர்-டிராக்டர் மோதல் 2 பேர் பலி: ஒருவர் கைது
டூவீலர்-டிராக்டர் மோதல் 2 பேர் பலி: ஒருவர் கைது
டூவீலர்-டிராக்டர் மோதல் 2 பேர் பலி: ஒருவர் கைது
டூவீலர்-டிராக்டர் மோதல் 2 பேர் பலி: ஒருவர் கைது
ADDED : ஆக 30, 2011 12:08 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டிராக்டர் மீது டூவீலர் மோதிய விபத்தில் டூவீலரில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கோட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ரகுநாத் (26). இதே கிராமத்தை சேர்ந்தவர் அரியமுத்து மகன் வேல்முருகன் (11). ரகுநாத்தும், வேல்முருகனும் நேற்று முனதினம் மாலை கோட்டாத்தூரிலிருந்து நக்கசேலம் கிராமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு பல்சர் டூவீலரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
டூவீலரை ரகுநாத் ஓட்டினார். டூவீலர் இரவு 8 மணியளவில் நக்கசேலம் ஹைவே சிட்டி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது எதிரே வந்த டிராக்டரில் டூவீலர் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரகுநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த வேல்முருகன் துறையூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ரகுநாத் அண்ணன் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில், பாடாலூர் இன்ஸ்பெக்டர் சோலைமுத்து வழக்கு பதிந்து மங்கூன் கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் டிராக்டர் டிரைவர் மனோகரன் (27) என்பவரை கைது செய்து விசாரிக்கிறார்.


