"தினமலர்' ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்
"தினமலர்' ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்
"தினமலர்' ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : ஆக 11, 2011 01:06 AM

சென்னை : 'தினமலர்' ஊழியர்களுக்கான, இரண்டு நாள் மருத்துவ முகாம் சென்னையில் நேற்று துவங்கியது.
இதற்கு, ராயப்பேட்டை ரோட்டரி சங்கம், செட்டிநாடு மருத்துவமனை, ராஜன் கண் மருத்துவமனை, பரசு பல் மருத்துவமனை ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. ரோட்டரி சங்க மருத்துவ பிரிவு இயக்குனர் டாக்டர் நந்தகுமார், முகாமை துவக்கி வைத்தார். செட்டிநாடு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், பரசு மருத்துவமனை டாக்டர் யஷ்வந்த் வெங்கட்ராமன், ராஜன் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் ராஜன், டாக்டர் குணசேகரன், ரோட்டரி சங்க நிர்வாகி திருமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனைகள், 'அல்ட்ரா ஸ்கேன்', இதய செயல்பாடு பரிசோதனை, பார்வை திறன் பரிசோதனை, பல் பரிசோதனை, தோல் பரிசோதனை உட்பட அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.


