ADDED : ஜூலை 27, 2011 10:30 AM
மதுரை: மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் வாசன் கண் மருத்துவமனை சார்பில், கண் மருத்துவ முகாம் நடந்தது.
டாக்டர்கள் முகேஷ் அகர்வால், பிரதீப் தேஷ் பாண்டே கண்நோய்களை விளக்கினர். பொதுமேலாளர் பன்னீர்செல்வம் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அறிவு திருக்கோயில் மனவளக்கலை மன்றம் சார்பில், உறுப்பினர் ராமன் தலைமையில், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.