/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/டவுனில் வஉசி.,பிறந்த நாள் விழா நாளை இலவச கண் பரிசோதனை முகாம்டவுனில் வஉசி.,பிறந்த நாள் விழா நாளை இலவச கண் பரிசோதனை முகாம்
டவுனில் வஉசி.,பிறந்த நாள் விழா நாளை இலவச கண் பரிசோதனை முகாம்
டவுனில் வஉசி.,பிறந்த நாள் விழா நாளை இலவச கண் பரிசோதனை முகாம்
டவுனில் வஉசி.,பிறந்த நாள் விழா நாளை இலவச கண் பரிசோதனை முகாம்
ADDED : செப் 03, 2011 02:47 AM
திருநெல்வேலி:நெல்லை டவுனில் வஉசி.,யின் 140வது பிறந்த நாளை முன்னிட்டு
இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.நெல்லை டவுன் தாயம்மை அம்பாள்
நடுநிலைப்பள்ளியில் வஉசி.,யின் 140வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
இதைமுன்னிட்டு அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் நாளை(4ம் தேதி) காலை 9
மணிக்கு இலவச கண் மருத்துவ முகாம் நடக்கிறது.
முகாமை இந்து கல்லூரி
ஆட்சிமன்ற உறுப்பினர் செல்லையா தலைமை வகிக்கிறார். நெல்லை டவுன் அருண்
ஆஸ்பத்திரி டாக்டர் பாக்கியம் பார்வதி துவக்கி வைக்கிறார். அரவிந்த்
ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராமகிருஷ்ணன் குழுவினர் அனைத்து கண் நோய்களுக்கு
இலவச பரிசோதனை செய்கின்றனர். கண்புரை நோயாளிகளுக்கு இலவச ஆபரேஷன்,லென்ஸ்,
மருந்து போக்குவரத்து மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. கண்ணாடி
தேவைப்படுவோர்களுக்கு சலுகை விலையில் 250 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
மாலையில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.


