ADDED : ஜூலை 14, 2011 11:49 PM
புதுக்கோட்டை: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு பணிகளில் போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர்.
புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ரயில்வே ஸ்டேஷன்களில் நேற்று அதிகாலை முதலே மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீஸார் சோதனையிட்டனர். இதுபோன்று பஸ் ஸ்டான்டுகள், கடைவீதிகள், கோவில்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி மெட்டல் டிடக்டர் மூலம் சோதனையிட்ட பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதித்தனர். மாவட்டம் முழுவதும் போலீஸ் ரோந்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டது.