ADDED : ஆக 12, 2011 11:39 PM
ஊட்டி : 'ஊட்டி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே எம்.ஜி.
ஆர்., சிலை வைக்க
வேண்டும்,' என மாநில முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. ஊட்டி நகர
அ.தி.மு.க., அவை தலைவர் குணசேகரன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: ஊட்டி
அரசு தாவரவியல் பூங்கா, அரசு படகு இல்லம், குருத்துக்குளி கின்னஸ் சாதனை
மரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு முதல்வரின் பெயரை சூட்ட வேண்டும். ஊட்டி
சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் முன்பாக உள்ள சாலையோர பூங்கா, சேரிங்கிராஸ் சாலையோர
பூங்கா இடத்தில் எம்.ஜி.ஆர், சிலை அமைக்க அனுமதி அளிக்க உத்தரவு இட
வேண்டும்.


