ADDED : செப் 08, 2011 02:22 AM
வாழப்பாடி:வாழப்பாடியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி சார்பில்,
ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி பஞ்சாயத்து யூனியன்
துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, வங்கி மேலாளர் ரமேஷ் தலைமை
வகித்தார். பள்ளி தலைமையாசிரியை சத்தியக்குமாரி வரவேற்றார்.அரசு பள்ளி
வகுப்பறை கட்டிடங்களுக்கு, பாரத ஸ்டேட் வங்கியின், வாழப்பாடி கிளை
சார்பில், 5 மின் விசிறிகள் வழங்கப்பட்டது.உதவி தொடக்கல்வி அலுவலர்
முனியப்பன், வங்கி அலுவலர்கள் ஸ்ரீதர், குமார், குமாரவேல், சன் ஸ்டார்
டிரஸ்ட் தலைவர் ஜவஹர் மற்றும் ஆசிரியர்கள் புஷ்பா, விஜியா, பேச்சியம்மாள்,
சர்தாஜ், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


