சீருடை விவகாரம் : மோகன் லாலிடம் விளக்கம் கேட்கிறது ராணுவம்
சீருடை விவகாரம் : மோகன் லாலிடம் விளக்கம் கேட்கிறது ராணுவம்
சீருடை விவகாரம் : மோகன் லாலிடம் விளக்கம் கேட்கிறது ராணுவம்
புதுடில்லி: ராணுவ சீருடைய தவறான முறையில் பயன்படுத்தியது குறித்து மலையாள நடிகர் மோகன்லாலிடம் பிராந்திய ராணுவம் விளக்கம் கோரியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சுற்றுலாதலங்களை மேம்படுத்தும் விளம்பரம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் நடித்துள்ள மோகன்லால் ராணுவ சீருடையை தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்படிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து பிராந்திய ராணுவமும் நடிகர் மோகன்லாலிடம் விளக்கம் கோரியுள்ளது.
இதுகுறித்து மோகன்லாலிடம் கேட்ட போது காந்தகார் படத்தில் நடித்த போது வேடத்திற்கு ஏற்றவாறு மட்டுமே ராணுவ உடையை பயன்படுத்தியுள்ளதாகவும் மற்றவர்கள் கூறுவதை போன்று ராணுவ உடையை தவறாக பயன்படுத்த வில்லை என்றும் இது தான் உண்மை நிலவரம் எனவும் கேரள அரசின் விளம்பர படத்தில் நடித்தததற்காக சிறப்பு ஊதியம் எதுவும் பெறவும் இல்லை என கூறினார்.


