/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி அருகே தாயை வெட்டிய மகன் கைதுதென்காசி அருகே தாயை வெட்டிய மகன் கைது
தென்காசி அருகே தாயை வெட்டிய மகன் கைது
தென்காசி அருகே தாயை வெட்டிய மகன் கைது
தென்காசி அருகே தாயை வெட்டிய மகன் கைது
ADDED : ஜூலை 14, 2011 01:16 AM
தென்காசி : தென்காசி அருகே சொத்துக்காக தாயை வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.தென்காசி அருகே மத்தளம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை.
இவரது மனைவி மீனாட்சி (50). இவர்களது மகன் புதுமாடன் (31). இவர் தனது தாயாரிடம் சொத்தை பிரித்து தரும்படி கூறியுள்ளார். அதற்கு மீனாட்சி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புதுமாடன் அரிவாளால் மீனாட்சியை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மீனாட்சி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.இச்சம்பவம் பற்றி குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவன் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் குமாரவேல் விசாரணை நடத்தி புதுமாடனை கைது செய்தார்.


