ADDED : ஜூலை 28, 2011 10:08 PM
ஊட்டி : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை 'லைப்ஸ்டைல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' மேலாளரால் விற்பனையாளர் பணியிடங்கள்.
அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 18 முதல் 25 வயதுக்குள் இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டதாரிகள், பட்டயதாரர்கள் பங்கேற்கலாம். ஊதியம் மாதம் 5000 ரூபாய். தகுதியும், விருப்பமும் உள்ள மனுதாரர்கள் வரும் ஆக.,3ம் தேதியன்று மதியம் 12.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவும். மனுதாரர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அட்டை அசல் மற்றும் ஜெராக்ஸ் நகல் கொண்டு வர வேண்டும். ஆங்கில பேச்சுத்திறன் கொண்ட மனுதாரர்களுக்கு திறமைக்கேற்ப ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


