/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கல்லூரிகள் மூலம் பி.எட் சான்றிதழ் பதிவு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடுகல்லூரிகள் மூலம் பி.எட் சான்றிதழ் பதிவு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு
கல்லூரிகள் மூலம் பி.எட் சான்றிதழ் பதிவு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு
கல்லூரிகள் மூலம் பி.எட் சான்றிதழ் பதிவு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு
கல்லூரிகள் மூலம் பி.எட் சான்றிதழ் பதிவு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு
ADDED : செப் 03, 2011 02:52 AM
திருநெல்வேலி:கல்லூரிகள் மூலம் பி.எட் சான்றிதழ்கள் பதிவு செய்யும் வசதியை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்படுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பு துறை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு தமிழகத்தில் அனைத்து
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுதாரர்களின் விபரங்கள் கம்ப்யூட்டரில்
பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பதிவு செய்ய
வெப்சைட்டின் முகப்பு பக்கத்தில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தற்போது பி.எட்
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அந்தந்த கல்லூரிகள் மூலம் சான்றிதழ்கள்
வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இச்சான்றிதழ்களை வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர
வேண்டியதில்லை. அவர்கள் பயின்ற கல்லூரிகளிலேயே இந்த கல்வித் தகுதியை
வெப்சைட் மூலம் பதிவு செய்யலாம். இதுதொடர்பாக அனைத்து கல்லூரி
பணியாளர்களுக்கும் போதிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பி.எட் கல்வித் தகுதியை பதிவு செய்ய மாணவ, மாணவிகள் பிற சான்றிதழ்களின்
ஜெராக்ஸ்களை கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி சான்றிதழ்கள்
(எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, டிகிரி, பி.எட்), ரேஷன் கார்டு, சாதி சான்று
ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதியை பதிவு செய்தவுடன் பதிவு
அடையாள அட்டையை கம்ப்யூட்டர் மூலம் பெற்று கொள்ளலாம். சான்றுகளின் நகல்களை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று
கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.


