/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்ற அயராது பாடுபடுவேன்தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்ற அயராது பாடுபடுவேன்
தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்ற அயராது பாடுபடுவேன்
தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்ற அயராது பாடுபடுவேன்
தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்ற அயராது பாடுபடுவேன்
ADDED : அக் 07, 2011 10:52 PM
காரைக்குடி : வெற்றி பெற்றால், தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்ற அயராது பாடுபடுவேன் என, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் தி.மு.க., வேட்பாளர் கே.ஆர்., ஆனந்த் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பேரூராட்சி தலைவர் பதவிக்கு என்னை வேட்பாளராக நிறுத்திய தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நன்றி.மக்களின் ஆசியோடு, 2 வது முறையாக போட்டியிடுகிறேன்.அடிப்படை பிரச்னைகளை நன்றாக அறிந்தவன்.
கடந்த 5 ஆண்டுகாலம் தி.மு.க, அரசின் சாதனைகளாக இங்கு நடந்த பல பணிகளை சொல்லலாம். குடிநீர் பிரச்னைக்கு 97 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. பாலங்கள் உட்பட கட்டுமான பணிகள் 94 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய சாலைகளில் தார்சாலை அமைக்கும் பணி 89 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளது. இவ்வாறு பல பணிகளை உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கோட்டையூர் பொதுமக்களின் நலன் கருதி வளர்ச்சி திட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன். அழகாபுரி, எழில்நகர் அமைந்துள்ள பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் இடம் உள்ளது. அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் வாரச்சந்தை அமைக்கப்படும். இளைஞர்களிடத்தில் விளையாட்டை ஊக்கு விக்கும் வகையில் அப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். நகர் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான பணிகளை செய்து முடிப்பேன். விடுபட்ட பணிகளை எம்.பி., எம்.எல்.ஏ., நிதி மூலம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க பாடுபடுவேன். அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்ற அயராது உழைப்பேன்'', என்றார்.நகர செயலாளர் வி.சிதம்பரம் உடனிருந்தார்.


