/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/முதல்வரின் ஆசியால் மீண்டும் வெற்றி உறுதி : வேட்பாளர் அனுசுயாதேவிமுதல்வரின் ஆசியால் மீண்டும் வெற்றி உறுதி : வேட்பாளர் அனுசுயாதேவி
முதல்வரின் ஆசியால் மீண்டும் வெற்றி உறுதி : வேட்பாளர் அனுசுயாதேவி
முதல்வரின் ஆசியால் மீண்டும் வெற்றி உறுதி : வேட்பாளர் அனுசுயாதேவி
முதல்வரின் ஆசியால் மீண்டும் வெற்றி உறுதி : வேட்பாளர் அனுசுயாதேவி
ADDED : செப் 30, 2011 01:16 AM
சிவகங்கை : சிவகங்கை 8வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் அனுசுயாதேவி வேட்பு மனு தாக்கல் செய்து கூறியதாவது: சிவகங்கை சந்தப்பர் சந்தில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய், திருவள்ளுவர் தெருவில் கழிவு நீர் கால்வாய், தார்சாலை, ராதாகிருஷ்ணன் தெருவில் இருந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றியுள்ளேன்.சத்தியமூர்த்தி தெரு, சரோஜினி தெரு தார்சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது.
8 வது வார்டில் திருவள்ளுவர் தெரு,சத்திய மூர்த்தி தெரு, ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளேன். மேலும் மற்ற பகுதிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் இவை செய்து முடிக்கப்படும்'' என்றார்.