/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் 2 பேர் மனுதாக்கல்நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் 2 பேர் மனுதாக்கல்
நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் 2 பேர் மனுதாக்கல்
நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் 2 பேர் மனுதாக்கல்
நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் 2 பேர் மனுதாக்கல்
ADDED : செப் 30, 2011 01:49 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர்
பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் இரண்டு பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு
அ.தி.மு.க., சார்பில் போட்டியிட நகர பொருளாளர் ரங்கராஜன்
அறிவிக்கப்பட்டார். அவர் கட்சியின் அனுமதியுடன் இரண்டு நாட்களுக்கு முன்
வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று அதே வார்டில் அ.தி.மு.க.,
சார்பில் கட்சி அனுமதியோடு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றத் துணைத்தலைவர்
செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். இரண்டு பேர் வேட்புமனு தாக்கல்
செய்ததால் கட்சியினரிடையே குழப்பம் நிலவுகிறது. இருவரில் யார் வேட்பாளர் என
வேட்பு மனு வாபஸ் நாளுக்கு பிறகே தெரியும்.