/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பிஷப் ஹீபரில் "பெஸ்டோகாம்-11' ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்பிஷப் ஹீபரில் "பெஸ்டோகாம்-11' ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்
பிஷப் ஹீபரில் "பெஸ்டோகாம்-11' ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்
பிஷப் ஹீபரில் "பெஸ்டோகாம்-11' ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்
பிஷப் ஹீபரில் "பெஸ்டோகாம்-11' ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்
ADDED : செப் 28, 2011 11:44 PM
திருச்சி: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடந்த 'பெஸ்டோகாம்- 2011' போட்டியில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வணிகவியல் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை சார்பில், 'பெஸ்டோகாம்- 2011' என்ற கல்லூரிக்களுக்கு இடையேயான கலைநிகழ்ச்சிப் போட்டிகள் நடந்தது. காலையில், 'பிரெய்ன் பவுல்' வினாடி வினா, 'பீஸ் பஸ்' வார்த்தை விளையாட்டிப்போட்டி, குரூப் டான்ஸ், கர்னாடக சங்கீதப் போட்டி, 'மைம் ÷ஷா' எனப்படும் மவுன மொழி போட்டிகள் நடந்தன. மாலையில், 'ஸ்டிரிங் பீட்ஸ்' வாத்திய இசைப்போட்டி, 'பூட் லூஸ்' தனிநபர் நடனப்போட்டி, முகத்தில் ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை திருச்சி ஜமால் முகமது கல்லூரி வென்றது. மதுரை லேடிடோக் கல்லூரி மாணவர்கள் 2ம் இடத்தை பெற்றனர்.


