/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/உள்ளாட்சி பதவிகளுக்கு 6,370 பேர் வேட்பு மனு தாக்கல்: இன்று கடைசி நாள்உள்ளாட்சி பதவிகளுக்கு 6,370 பேர் வேட்பு மனு தாக்கல்: இன்று கடைசி நாள்
உள்ளாட்சி பதவிகளுக்கு 6,370 பேர் வேட்பு மனு தாக்கல்: இன்று கடைசி நாள்
உள்ளாட்சி பதவிகளுக்கு 6,370 பேர் வேட்பு மனு தாக்கல்: இன்று கடைசி நாள்
உள்ளாட்சி பதவிகளுக்கு 6,370 பேர் வேட்பு மனு தாக்கல்: இன்று கடைசி நாள்
ADDED : செப் 28, 2011 11:34 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று வரை 6 ஆயிரத்து 370 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள், தி.மு.க., - காங்கிரஸ் - ம.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்தால், கடைசி நாளில் அதிகப்பட்சமாக வேட்பு மனு தாக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 3 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிகபட்சமாக 3 ஆயிரத்து 495 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். நேற்று நல்ல நாள் இல்லை என்பதால், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு குறைந்திருந்தது. நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இருவரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 26 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 45 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 391 பேரும், நகராட்சி தலைவர் பதவிக்கு இருவரும், நகராட்சி கவுன்சிலருக்கு 13 பேரும், டவுன் பஞ்சாயத்து தலைவருக்கு ஒருவரும், டவுன் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலருக்கு 17 பேர் உள்ளிட்ட 497 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கடந்த 22ம் தேதி முதல் நேற்று (செப்.,28) வரையில் மொத்தம் 6 ஆயிரத்து 370 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால், அதிகபட்சமான வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


