தென்னையில் இலை கருகல் நோய் தாக்கம்
தென்னையில் இலை கருகல் நோய் தாக்கம்
தென்னையில் இலை கருகல் நோய் தாக்கம்
ADDED : செப் 29, 2011 12:52 AM
நாமக்கல்: ப.வேலூர் அருகே தென்னையில் இலை கருகல் நோய் தாக்கம்
ஏற்பட்டுள்ளது. அதனால், அம்மரங்களின் மட்டைகள் தீயிட்டுக் கருகியதுபோல்
காட்சியளிப்பதுடன், தேங்காய் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக,
விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.ப.வேலூர் அதன் சுற்றுவட்டார கிராமங்களில், பல
ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. தென்னையில் சாகுபடியை அதிகரிக்க, விவசாயிகள் பல்வேறு யுக்திகளை
கையாண்டு வருகின்றனர்.எனினும், பூச்சித் தாக்குதல் உள்ளிட்டவற்றால்
தென்னையில் உற்பத்தி பாதிக்கப்படுவது வழக்கம். ப.வேலூருக்கு செல்லும்
வழியில் உள்ள பிள்ளாகளத்தூர் கிராமத்தில் உள்ள தென்னை மரங்களில் இலை கருகல்
நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.அந்நோய் தாக்கப்பட்ட மரங்களில், தென்னை
மட்டைகளை தீயிட்டுக் கொளுத்தியதைப் போல் கருகிய நிலையில் காணப்படுகிறது.
இந்நோய் தாக்கத்தால், தேங்காய் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் நிலை
உள்ளது. அதனால், தென்னை விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:தென்னையில், இலை கருகல் நோய் தாக்கம்
ஏற்பட்டுள்ளது.
இந்நோய், காற்று மூலம் தென்னைகளுக்கு பரவும் தன்மை உடையது.
நோய் தாக்கப்பட்ட மரங்களின் மட்டைகள் கருகும். தேங்காய் உற்பத்தியும்
பாதிக்கும். நோய் தாக்கப்பட்ட மரங்களின் மட்டைகளை வெட்டி தீயிட்டுக்
கொளுத்த வேண்டும் என, வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.அதன்படி,
விவசாயிகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்கின்றனர். மற்ற பகுதிகளுக்கும்
இந்நோய் தாக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை, வேளாண் அதிகாரிகள் மேற்கொள்ள
வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


