/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக விழிப்புணர்வு முகாம்தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 01, 2011 02:28 AM
கோவில்பட்டி : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக கோவில்பட்டி கல்வி மையத்தின் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு கோவில்பட்டி கல்விமைய ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து கைகொடுக்கும் கை தொண்டு நிறுவன மேலாளர் பிரபு கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கோவில்பட்டி கல்வி மையம் துவங்கி கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பயின்றுள்ளனர். இக்கல்வி மையத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு குறைந்த கட்டணம் பெறப்படுகிறது. இதனடிப்படையில் தற்போது எம்ஏ., எம்பிஏ., எம்காம்., எம்எஸ்சி., ஆகிய முதுகலைப்பட்டப் படிப்புகளுக்கும், பி.ஏ., பி.காம்., பிபிஏ., பி.எஸ்சி., பிலிட்., போன்ற இளங்கலை பட்டப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. மேலும் வேறு எந்தவொரு பல்கலைக் கழகத்திலும் இல்லாத சிறப்பாக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் 25 மதிப்பெண்கள் செய்முறை தேர்வுக்காக வழங்கப்படுகிறது. இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு பேசினார். முகாமில் கல்விமைய ஆலோசகர்கள் முத்துசெல்வம், சம்பத்குமார், ஜார்ஜ், அண்ணாமலைச்சாமி, சாமுவேல், சோமசுந்தரம் உட்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்வி மைய பணியாளர் கற்பகம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்விமைய ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் செய்திருந்தார்.