/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டாக்டரை திட்டியதால் திடீர் வேலை நிறுத்தம் : ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அவதிடாக்டரை திட்டியதால் திடீர் வேலை நிறுத்தம் : ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அவதி
டாக்டரை திட்டியதால் திடீர் வேலை நிறுத்தம் : ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அவதி
டாக்டரை திட்டியதால் திடீர் வேலை நிறுத்தம் : ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அவதி
டாக்டரை திட்டியதால் திடீர் வேலை நிறுத்தம் : ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அவதி
ADDED : ஜூலை 27, 2011 01:28 AM
வில்லியனூர் : டாக்டரை தகாத வார்த்தையால் திட்டியதைக் கண்டித்து, சக டாக்டர்களும், ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று டாக்டர் சாந்திமதி தலைமையில் 4 டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். விஷம் குடித்த வாலிபருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக் காக ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது ஒதியம்பட்டு ரோட்டில் மருத்துவமனைக்கு அருகே மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மீது மோதுவது போல ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. பயந்து போன அந்த நபர் மருத்துவமனைக்கு உள்ளே சென்று பணியில் இருந்த டாக்டர் சித்தார்த்தனை, தகாத வார்த்தையால் திட்டி தகராறில் ஈடுபட்டு அங்கிருந்து வெளியேறினார். இதை கண்டித்து மருத்துவமனையில் நேற்று பணியில் இருந்த டாக்டர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக பணிகளைப் புறக்கணித்தனர். இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். தகவலறிந்த வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், டாக்டர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். தேனீ ஜெயக்குமார் எம்.எல்.ஏ., நலவழித்துறை துணை இயக்குனர் விஜயாபாலகந்தன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து, டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், அனைவரும் பணிக்குத் திரும்பினர்.