/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மக்களை தேடி குறை கேட்பேன் சுயேச்சை வேட்பாளர் பேச்சுமக்களை தேடி குறை கேட்பேன் சுயேச்சை வேட்பாளர் பேச்சு
மக்களை தேடி குறை கேட்பேன் சுயேச்சை வேட்பாளர் பேச்சு
மக்களை தேடி குறை கேட்பேன் சுயேச்சை வேட்பாளர் பேச்சு
மக்களை தேடி குறை கேட்பேன் சுயேச்சை வேட்பாளர் பேச்சு
ADDED : அக் 07, 2011 10:22 PM
திண்டுக்கல் : ''மக்களை தேடிச் சென்று குறைகளை கேட்பேன்; பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்,'' என, திண்டுக்கல் நகராட்சி 18 வது வார்டில், வைரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வி.பவித்ரா கூறினார்.திண்டுக்கல் வி.எம்.
ஆர்.பட்டி, சவுராஷ்டிரா காலனியில் அவர் பேசியது:மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் போட்டியிடுகிறேன். சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இல்லை. பல ஆண்டுகளாக வடுகராஜக்காபட்டியில் கழிப்பறை மூடியே கிடக்கிறது. இதை திறப்பதற்கு ஏற்பாடு செய்வேன். பாதாள சாக்கடை திட்டத்தால் பழுதான ரோடுகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடப்பதால், தொற்று நோய்கள் பரவி மக்களை பாதிக்கிறது. வி.எம்.ஆர்.பட்டியில் மழை நீர் தேங்கி பள்ளத்தை உண்டாக்குகிறது. இங்கு மழைநீர் தேங்காமல், செல்ல வடிகால் வசதி செய்து தரப்படும். நகரில் கொசுக்கள் அதிகமாக இருப்பதால் டெங்கு, மலேரியா உட்பட பல நோய்கள் தாக்க கூடும். வார்டில் கொசுக்கள் தொல்லையை குறைக்க, வாரத்தில் இரண்டு நாட்கள் கொசு மருந்து அடிக்கப்படும்.ஆரோக்கியமாதா தெருவில் உள்ள அங்கன்வாடி சுத்தம் செய்யப்பட்டு, இங்குள்ள காலியிடம் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், விளையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இதன் அருகில் முதியோர் ஓய்வறை ஏற்படுத்தப்படும். வீடுகள்தோறும் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். அரசின் அனைத்து இலவச திட்டங்களையும் பெற்றுத் தருவேன். வி.ஜி. எஸ். மஹால், எல்.ஜி.பி., காம்பவுண்ட், சவுராஷ்டிரா காலனி, விநாயகர் கோயிலில் பாலம் அமைக்கப்படும், என்றார்.


