ADDED : ஆக 02, 2011 12:54 AM
செஞ்சி : செஞ்சி அருகே வேலை உறுதி திட்டத்தில் பணி வழக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
செஞ்சியை அடுத்த மேல் ஒலக்கூர் ஊராட்சியில் நேற்று காலை ஊரக வேலை
உறுதியளிப்பு திட்டத்திற்கு 125 பேர் வேலைக்கு வந்தனர். இவர்கள் காலை 9.30
மணிக்கு வேலைக்கு வந்ததால், அதிகாரிகள் வேலையை ரத்து
செய்தனர்.ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலை 10 மணிக்கு சாலை மறியல் செய்தனர்.
இந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்தனர். தகவலறிந்து வந்த
செஞ்சி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் விரைந்து சென்று பஸ்சை
விடுவித்தனர். பி.டி.ஓ., கலியமூர்த்தி பேச்சு வார்த்தை நடத்தியதைத்
தொடர்ந்து பொதுமக்கள் சமாதானமடைந்தனர்.