Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சி கோட்டை ஆலமரம் பாதுகாக்க நடவடிக்கை

செஞ்சி கோட்டை ஆலமரம் பாதுகாக்க நடவடிக்கை

செஞ்சி கோட்டை ஆலமரம் பாதுகாக்க நடவடிக்கை

செஞ்சி கோட்டை ஆலமரம் பாதுகாக்க நடவடிக்கை

ADDED : செப் 08, 2011 11:45 PM


Google News

செஞ்சி : செஞ்சிக் கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில், வண்டு துளைத்ததால் காய்ந்து வரும் ஆலமரத்தை காப்பாற்றுவதற்கு, தோட்டக்கலைத் துறையினர் முயற்சி எடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில், 300 ஆண்டு பழமையான ஆலமரங்கள் உள்ளன. இந்த மரங்களில் சிலவற்றை கூன் வண்டுகள் துளைத்து, பட்டுப்போய் வேரோடு சாய்ந்தன. வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று, வண்டு தாக்குதலால் கடந்த 5ம் தேதி இரவு முறிந்து விழுந்தது. பல கிளைகள் பட்டுப்போகும் நிலையில் உள்ளன. இங்குள்ள மரங்களை காப்பாற்ற வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்திய தொல்லியல் துறையின் ஒத்துழைப்புடன், செஞ்சி தோட்டக்கலைத் துறை அலுவலர் சீனுவாசன் மேற்பார்வையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை நேற்று மேற்கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர்கள் அம்பேத்கர், மணிகண்டன், ரவிச்சந்திரன், அறிவழகன், பார்த்தீபன், மணிவண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர், தச்சு வேலை செய்பவர்கள் உதவியோடு மரங்களில் துளையிட்டு, இந்த துளைகளில் வண்டுகளை கொல்வதற்கான பூச்சி மருந்தை செலுத்தினர். முறையான இடைவெளியில் இதே போன்று அடுத்தடுத்து பூச்சிக் கொல்லி மருந்தை செலுத்துவதன் மூலம், வண்டு தாக்குதலில் இருந்து மரத்தை காப்பாற்ற முடியும் என, தோட்டக்கலைத் துறை அலுவலர் சீனுவாசன் தெரிவித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us