/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உப்பள தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனைஉப்பள தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
உப்பள தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
உப்பள தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
உப்பள தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஆக 21, 2011 01:45 AM
தூத்துக்குடி : ஆத்தூர் அருகே உப்பளத்தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு
ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு கூறியது.
ஆத்தூர் அருகே புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(45).
பழையகாயல் அருகேயுள்ள ஒரு உப்பளத்தில் மேஸ்திரியாக ஜெயராஜ் என்பவர்
வேலைபார்த்துவந்தார். இந்நிலையில் ஜெயராஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக
பழனிச்சாமி மேஸ்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பழனிச்சாமி மேஸ்திரியாக
வேலைக்கு சேர்ந்தவுடன் ஜெயராஜின் உறவினர் மனோகரன் என்பவரை வேலையில் இருந்து
நீக்கியுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக ஜெயராஜ்(37), கோபி(35),
ஜெகன்(27), பேச்சிராஜ்(40), பேச்சிராஜ்(27) கணேசன்(33), பாக்கியராஜ்(28)
ஆகியோர் சேர்ந்து உப்பளத்தில் உறங்கிகொண்டிருந்த பழனிச்சாமியை கொ லை
செய்தனர். இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தினர்.
இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணவல்லி குற்றம் சாட்டப்பட்ட 7
பேருக்கும் ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு
கூறினார். இந்த வழக்கில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அரசு தரப்பில்
வக்கீல் முத்து ஆஜராகி வாதாடினார்.


