Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வெளிப்படையாக துறையூர் நகராட்சி நிர்வாகம்

வெளிப்படையாக துறையூர் நகராட்சி நிர்வாகம்

வெளிப்படையாக துறையூர் நகராட்சி நிர்வாகம்

வெளிப்படையாக துறையூர் நகராட்சி நிர்வாகம்

ADDED : அக் 11, 2011 02:18 AM


Google News
துறையூர்: ''துறையூர் நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக நடந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில், வேட்பாளராக போட்டியிடும் ஆதித்தன்ராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்.துறையூர் நகராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆதித்தன்ராஜன்(53) போட்டியிடுகிறார்.

இவர் துறையூரில் ரோஜா மார்க் மசாலா உற்பத்தி நிறுவனத்தை 20 ஆண்டுக்கு மேல் நடத்தி வருகிறார். 15 ஆண்டாக துறையூர் வட்டார மளிகை வியாபாரிகள் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வர்த்தகர்களிடம் நட்பை பேணி வருகிறார்.ஆதித்தன்ராஜன் தலைவர் பதவிக்கும், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களும், 24 வார்டுகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.அப்போது ஆதித்தன்ராஜன் பின்வரும் வாக்குறுதிகளை அளித்து ஓட்டு சேகரிக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைமையில் செயல்படும் மத்திய அரசு நகராட்சியில் குடிசை பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் வார்டு: ஒன்று, ஏழு, எட்டு, ஒன்பது, 17, 18, 19, 20ல் 600க்கும் மேற்பட்ட குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டு, சாலை, கழிவு நீர் கால்வாய், குடிநீர், சமுதாய கூடம் ஆகிய வசதி செய்யப்பட்டுள்ளது.தலைமை தபால் அலுவலகம் சொந்த கட்டிடம் கட்டவும், புளியஞ்சோலை சுற்றுலா தலம் மேம்படுத்தவும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நிதி ஒதுக்கியது.உள்கட்டமைப்பு மற்றும் திட்டப்பணிகள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் மறைந்த ராஜிவ்காந்தி கொண்டு வந்த பஞ்சாயத்துராஜ் திட்டத்தால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி உள்ளாட்சி பிரதிநிதிகளை மக்களே நேரடியாக தேர்ந்தெடுத்து அனுப்ப சட்டம் இயற்றிய பெருமைக்குரிய கட்சி காங்கிரஸ் தான்.துறையூர் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அனைவரையும் வெற்றி பெறச்செய்தால், அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைக்க புதிய குடிநீர் டேங்க் கட்டி, பைப் லைன் புதிதாக அமைக்கப்படும். 18வது வார்டில் மத்திய அமைச்சர் வாசன் எம்.பி., நிதியில் கட்டி ஐந்தாண்டாக நீரேற்றி பயன்பாட்டுக்கு வராத தண்ணீர் டேங்கை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.சின்ன ஏரியில் கலக்கும் கழிவு நீரை தடுத்து, சுத்தப்படுத்தி தனியே வெளியேறற்றி மத்திய அரசின் நிதி உதவியுடன் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். மத்திய அரசின் திட கழிவு மேலாண்மை திட்டத்தில் துறையூர் நகரில் வெளியேற்றப்படும் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கப்படும் வருவதை மேலும் சிறப்பாக செயல்படுத்தி அதிக அளவில் இயற்கை உரம் தயாரிக்கப்படும்.ஒன்பதாவது வார்டில் கட்டி முடித்து திறக்கப்படாமல் இருக்கும் சமுதாய கூடத்தினை உணவுக்கூடம் மற்றும் கழிப்பிடம் வசதியுடன் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், குறைந்த வாடகையில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மற்றும் குடிசை மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் 17வது வார்டு சமுதாய கூட பணியினை உடனே முடித்து குடிசைப்பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு திறந்து விடப்படும்.நகராட்சியில் மாதத்திற்கு இருமுறை நகராட்சி அதிகாரிகள், உறுப்பினர்களை கொண்டு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி, பிறப்பு இறப்பு சான்றிதழ், குடிநீர் வரி, சொத்து வரி பெயர்மாற்றம், புதிய வரிவிதிப்பு மற்றும் வரைபட அனுமதி ஆகியவை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சி விரிவாக்க பகுதிகளில் தார்சாலை, சாக்கடை வசதி, தண்ணீர் வசதி, லைட் வசதி ஆகியவை இல்லாத அனைத்து புறநகர் பகுதிகளிலும் மேற்கண்ட வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சியில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பி துறையூர் நகர மக்களுக்கு விரைந்து பணியாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு வாக்குறுதி அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us