/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஓட்டு கேட்கவிடாமல் தடுத்ததாக தி.மு.க., செயலாளர் மீது வழக்குஓட்டு கேட்கவிடாமல் தடுத்ததாக தி.மு.க., செயலாளர் மீது வழக்கு
ஓட்டு கேட்கவிடாமல் தடுத்ததாக தி.மு.க., செயலாளர் மீது வழக்கு
ஓட்டு கேட்கவிடாமல் தடுத்ததாக தி.மு.க., செயலாளர் மீது வழக்கு
ஓட்டு கேட்கவிடாமல் தடுத்ததாக தி.மு.க., செயலாளர் மீது வழக்கு
ADDED : அக் 07, 2011 10:33 PM
காரியாபட்டி : காரியாபட்டி இசலிமடையை சேர்ந்தவர் தரிசியா.
இவர் டி.செட்டிகுளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் ஆதரவாளர்களுடன் ஓட்டு சேகரிக்க சென்றார். செட்டிகுளம் பஸ் ஸ்டாப் அருகே, தி.மு.க.,மாவட்ட துணை செயலாளர் போஸ், இவரது உறவினர்கள் ரத்தினசாமி, வேங்கைமார்பன், நவசக்தி, முருகேசன் ஆகியோர் வழிமறித்து, ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். தகாத வார்த்தைகளால் திட்டி, தங்க செயின் 2 பவுனை பறித்து, கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்தனர். காரியாபட்டி போலீசார் தி.மு.க.,மாவட்ட செயலாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


