மாநில போட்டியில் பூந்துறை மாணவியர்
மாநில போட்டியில் பூந்துறை மாணவியர்
மாநில போட்டியில் பூந்துறை மாணவியர்
ADDED : ஜூலை 24, 2011 12:57 AM
ஈரோடு: அவல் பூந்துறை பள்ளி மாணவிகள் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் ஜூலை 15, 16 ஆகிய இரு தேதிகளில் மாவட்ட அளவில் ஜூனியர் தடகளப் போட்டி நடந்தது.
அதில் அவல்பூந்துறை லயன்ஸ் பள்ளி மாணவிகள் 15 பேர் பதக்கங்கள் பெற்றனர். ஒன்பது மாணவிகள் சிவகாசியில் நடக்கும் மாநில அளவில் நடக்கும் தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 14 வயது பிரிவில் ஸ்ரீவித்யா உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
உயரம் தாண்டுதலில் தீபனா, 800 மீட்டர் ஓட்டத்தில் நிவேதா, 100 மீட்டரில் கிருத்திகா இரண்டாமிடம் பெற்றனர். 16 வயது பிரிவில் ஈட்டி எறிதலில் பிரியதர்ஷினி இரண்டாமிடம், 100 மீட்டரில் ஜனனி முதலிடம் பெற்றனர்.


