ADDED : செப் 07, 2011 11:01 PM
கடலூர்:கடலூர் அடுத்த குமாரநாயக்கன்பேட்டை நியூ மில்லேனியம் மெட்ரிக்
பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.நியூ மில்லேனியம் அறக்கட்டளை
கல்விக்குழு துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர்
நாகலிங்கம் வரவேற்றார். தாளாளர் பிரபாகர் வாழ்த்திப் பேசினார். சிறப்பு
விருந்தினரான மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி விளையாட்டுப்
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கிப் பேசினார்.
விழாவில் நியூ மில்லேனியம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் லூர்துநாதன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


