Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தீபாவளிக்கு ரயிலில் டிக்கெட் கூட்டம் குறைந்தது ஏன் ?

தீபாவளிக்கு ரயிலில் டிக்கெட் கூட்டம் குறைந்தது ஏன் ?

தீபாவளிக்கு ரயிலில் டிக்கெட் கூட்டம் குறைந்தது ஏன் ?

தீபாவளிக்கு ரயிலில் டிக்கெட் கூட்டம் குறைந்தது ஏன் ?

ADDED : ஜூலை 26, 2011 12:39 AM


Google News

சென்னை :தீபாவளியை முன்னிட்டு, தென்மாவட்ட ரயில்களில் அக்., 23ம் தேதி பயணிக்க, சில ரயில்களில் இடவசதி உண்டு.

அக்., 24ம் தேதிக்கான முன்பதிவு இன்று காலை துவங்குகிறது. தீபாவளி பண்டிகை தினங்களுக்கு, கடந்த 23ம் தேதி முதல் ரயில் முன்பதிவு நடக்கிறது. இதில், அக்., 21, 22ம் தேதிக்கான முன்பதிவுகள் அனைத்தும் நிரம்பி விட்டன. பாண்டியன், நெல்லை, கன்னியாகுமரி உட்பட அனைத்து ரயில்களிலும், காத்திருப்போர் பட்டியல் துவங்கிவிட்டது.



அதே போல், 23ம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று காலை துவங்கியது. நேற்று காலை முன்பதிவு மையங்களில் கூட்டம் இல்லை. பாண்டியன், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களை தவிர, மற்ற ரயில்களில் ஓரளவுக்கு இடங்கள் இருந்தன. நேற்று பிற்பகல், 3 மணி நிலவரப்படி, பாண்டியன் எக்ஸ்பிரசில் 45 பேரும், நெல்லை எக்ஸ்பிரசில் 6 பேரும் காத்திருப்போர் பட்டியல் இருந்தனர். ஆனால், கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் 11, அனந்தபுரி எக்ஸ்பிரசில் 29, முத்துநகர் ரயிலில் 13, சென்னை -மதுரை சிறப்பு ரயிலில் 177 சீட்கள் காலியாக இருந்தன. பகல் நேர ரயில்களிலும் இருக்கை வசதி உண்டு.தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அக்., 24ல் பயணிப்பதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. இதனால், இன்று ரயில்வே முன்பதிவு மையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.



முன்பதிவு வகையில் கூட்டம் இல்லை

இது குறித்து ரயில்வே முன்பதிவு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, 'வழக்கமாக தீபாவளிக்கு முன்பாக நான்கைந்து நாட்கள் இருக்கும் போதே முன்பதிவு மையத்திற்கு, ஏராளமானோர் வருவர். ஆனால், இம்முறை நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. டிக்கெட்களும் அரை மணி நேரத்திற்குப் பின்னர் தான் நிரம்பின. இன்று கூட (நேற்று) கூட்டம் குறைவாகத் தான் இருந்தது. சில ரயில்களில் இன்னும் இடம் இருக்கிறது. இதற்குக் காரணம், பெரும்பாலானோர் வீட்டிலிருந்தபடியே இ-டிக்கெட் பதிவு செய்து கொள்கின்றனர்' என்றார்.



புரோக்கர்கள் கைவரிசை?



ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்களில், புரோக்கர்கள் வருவதை தடுக்க, ஆர்.பி.எப்., போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, சென்னையில் முன்பதிவு மையங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருப்பினும், டிக்கெட்கள் அனைத்தும் முடிந்து விட்டன. இதற்கு, ஆன்லைன் மூலம் புரோக்கர்கள் முன்பதிவு செய்திருக்கலாம் என, பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். தீபாவளிக்கு முன்னதாக முன்பதிவு துவங்கும் இன்று மற்றும் நாளை மட்டுமாவது, பயணிகள் வசதிக்காக, ஆன்லைன் முன்பதிவு நேரத்தை அரை மணி நேரமாவது தள்ளி வைக்க, ரயில்வே நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us