ADDED : ஜூலை 13, 2011 11:46 PM
சிதம்பரம்: சிதம்பரம் ஆர்.கே.ஜிவிருக்ஷா மாண்டிசோரி பள்ளியில் பசுமை தின விழா நடந்தது.பள்ளி மேலாளர் நிர்மலா தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் உஷா முன்னிலை வகித்தார். பசுமை தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு சுற்றுச் சூழல் மற்றும் பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் பச்சை நிற உடை உடுத்தியும், பச்சை நிற பொருட்கள் வைத்தும் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


