/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/குத்துச்சண்டை போட்டி செங்குந்தர் கல்லூரி சாம்பியன்குத்துச்சண்டை போட்டி செங்குந்தர் கல்லூரி சாம்பியன்
குத்துச்சண்டை போட்டி செங்குந்தர் கல்லூரி சாம்பியன்
குத்துச்சண்டை போட்டி செங்குந்தர் கல்லூரி சாம்பியன்
குத்துச்சண்டை போட்டி செங்குந்தர் கல்லூரி சாம்பியன்
ADDED : செப் 16, 2011 01:33 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி, பெரியார் பல்கலை அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலை அளவிலான குத்துச்சண்டை போட்டி, ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. அதில், செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஸ்ரீதர், அலெக்சாண்டர், ஜெகன், சந்தோஷ், இளங்கோ ஆகியோர் பங்கேற்று, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர். மேலும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை, தாளாளர் ராஜசேகர், டீன் பாலதண்டபாணி, முதல்வர் ஆறுமுகம், உடற்கல்வி இயக்குநர் வெங்கடாஜலம் ஆகியோர் பாராட்டினர்.


