திருவம்பட்டு பாலம் சீரமைக்கப்படுமா?
திருவம்பட்டு பாலம் சீரமைக்கப்படுமா?
திருவம்பட்டு பாலம் சீரமைக்கப்படுமா?
ADDED : ஆக 09, 2011 02:44 AM
செஞ்சி : திருவம்பட்டில் உடைந்து போன சிறிய பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.செஞ்சியில் இருந்து கீழ் மாம்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் திருவம்பட்டு கிராம எல்லையில், நாட்டார் மங்கலம் கூட்ரோடு உள்ளது.
மூன்று சாலைகளின் சந்திப்பில் திருவம்பட்டு ரோட்டில் ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கான சிறிய பாலம் கட்டி உள்ளனர். இந்த பாலத்தின் வடக்கு பகுதியில் சிமென்ட் கான்கிரிட் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இந்த பள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளானது. இதனால் கிராம மக்கள் பள் ளத்தை சுற்றிலும் கற்களை வைத்து எச்சரித்துள்ளனர்.இதனை சரி செய்ய ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


